திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது குண்டாஸ் பாய்ந்தது! காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாஜக நிர்வாகியான அலிசா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மையை ஆய்வு செய்த காவல்துறை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை தொடர்ந்து சிறையில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளதால், இருவரும் உடனடியாக ஜாமீன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Post

Latest News