ரெயிலில் அமர இடம் கிடைக்காததால் பயணி ஒருவர் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவின் ஐஷ்பாக் ரெயில் நிலையத்தில் நபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர், அமருவதற்கு இடம் கிடைக்காததால் அதிருப்தியடைந்து, ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு ரெயிலில் எந்தவித வெடிபொருளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ இல்லை என்பது தெரியவந்தது.
போலியான வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் தெலங்கானாவைச் சேர்ந்த சைனி ஜாக்கி (26) என்பது தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
