உத்தர பிரதேசத்தில் கூகுள் மேப் காட்டிய மாற்று வழியை பின்பற்றி சென்ற குடும்பத்தினர் பயணித்த கார் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியைச் சேர்ந்த சாஹில் என்பவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் மீரட் மாவட்டத்தில் உள்ள கித்தோர் நகருக்கு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பயணத்தின் போது அவர்கள் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
அப்போது, ஹாப்பூர் மாவட்டத்தின் ஆனந்த் விஹார் யோஜனா பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. இரவு நேரமாக இருந்ததால், சில நொடிகளில், கார் சாலையோரத்தில் இருந்த ஆழமான கழிவுநீர் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இதனால் காரின் கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், உள்ளே இருந்த 5 பேரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அவசர உதவி எண்ணான 112-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி காருக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
