திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக பல பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி–காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820), ஜூன் 23-ஆம் தேதி வரை (ஜூன் 21 தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், காரைக்காலில் இருந்து புறப்படும் காரைக்கால்–திருச்சி டெமு ரெயில் (எண்: 76819), குறிப்பிட்ட நாட்களில் திருவாரூரில் இருந்து மட்டுமே இயக்கப்படும்.
மேலும், திருச்சியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் திருச்சி–ஈரோடு பயணிகள் ரெயில் (எண்: 56809), ஜூன் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், திருச்சி–ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்: 12664) ஜூன் 19-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பதிலாக மதியம் 2.20 மணிக்கு புறப்படும். திருச்சி–பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) ஜூன் 23-ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
காரைக்குடி–திருச்சி பயணிகள் ரெயில் (எண்: 56832) நாளை முதல் ஜூன் 23 வரை (ஜூன் 21 தவிர) காலை 9.50 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருச்சி வழியாக செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 முதல் 55 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16128) ஜூன் 18 முதல் 24 வரை குறிப்பிட்ட நாட்களில் 15 முதல் 25 நிமிடங்கள் வரை தாமதமாக செல்லும்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து புறப்படும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் (எண்: 17616) பயண நேரத்தில் 55 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
