இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் விஜய், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News