யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? – தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம்!

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகேஷ்குமார் அகர்வால் தனது 22 வயதிலேயே கடினமான ஐபிஎஸ் (IPS) தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார்.

சிபிஐ (CBI), சிபிசிஐடி (CB-CID) உட்பட நாட்டின் மிக முக்கிய புலனாய்வு அமைப்புகளில் உயர் பதவிகள் வகித்து, பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்ட அனுபவம் கொண்டவர்.

காவல்துறைப் பணியில் இவரது சிறந்த சேவையைப் பாராட்டி, இவருக்கு ‘சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சேவையில் சிறந்து விளங்கியதற்காக ‘முதலமைச்சர் பதக்கம்’ பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

Related Post

Latest News