மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் பணம் கேட்டு மிரட்டியதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி விஜயகுமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான விஜய் மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். கழக தோழர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

Related Post

Latest News