பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் – அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்பொழுது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இது குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்பதை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Post

Latest News