மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் – மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி

மேற்குவங்க மாநிலத்தில், வரும் 23 மற்றும் 29 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமான 23ஆம் தேதியில் 152 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், 6 மாதங்களுக்குள் பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உறுதி செய்யப்படும்.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 45 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும்.

ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜக திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

RELATED NEWS

Latest News