இன்று முதல் 21-ம் தேதி வரை நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, ஏப்ரல் 06:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் நிலையத்தில் இருந்து இயக்கக்கூடிய சில ரயில்கள் தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் இன்று முதல் வருகிற 21-ம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. ஆனால் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இதே போல, ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயில் இன்று முதல் மறுஅறிவிப்பு வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்த 2 விரைவு ரயில்களும் எழும்பூருக்கு தற்காலிகமாக வருவது நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம்- ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் அதற்கேற்றவாறு பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED NEWS

Latest News