மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டமா? முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்பு!

CM Stalin announced the new pension scheme

சென்னை, டிசம்பர் 30:

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு, தனது அறிக்கையை இன்று(டிச. 30) முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த. உதயச்சந்திரன், நிதித்துறை துணைச் செயலாளர் (வரவு-செலவு) பிரத்திக் தாயள், குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அரசுப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்து, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்றுகள் கூட்டங்களை நடத்தி கடந்த செப். 30-ம் தேதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த நிலையில், இன்று முழு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை