சென்னை, செப்டம்பர் 30:
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை (அக். 1) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் (அக். 2) விஜயதசமி இரண்டு நாள்கள் அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், வார இறுதி நாட்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஆகும் நிலையில், அக்டோபர் 3ம் தேதி வேலை நாளாக இருந்தது. இதனை பொது விடுமுறையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே எழுந்து உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அக்டோபர் 3-ஆம் தேதியையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க பரிசீலனை செய்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இதுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.