காட்பாடி, ஆகஸ்ட் 02:
வெளிமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வாக்காளர்களாக ஆகுவதால் வருங்காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்த துரைமுருகன், உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் மேடையில் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுடன் கலந்துகொண்ட அவர், பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பான கேள்விக்கு, “அவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே வேலை வாய்ப்புகளைப் பெற்றிருந்தால் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இங்கே வருவதால் உண்டாகும் சூழ்நிலை மிகவும் சிக்கலானது. பீகாரிலுள்ள பலரை அரசாங்கம் வாக்காளர் பட்டியலில் நீக்கி விட்டதாகவும் இதுபோல் நம் மாநிலங்களில் செய்யக் கூடாது என்பதையும் கவனிக்க வேண்டும். இது பெரிய பிரச்சனை; இதற்கான தீர்வை தலைவர்கள் அணுக வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.