டெல்லி, ஜூலை 23:
இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக தொடர்ச்சியாக முடங்கியுள்ளது. இன்று மூன்றாவது நாளாகவும், மக்களவைக் கூட்டம் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பெரும் அரசியல் பரபரப்பை உருவாக்கி வரும் நிலையில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவும் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் சர்ச்சையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் பல முறை கூறுகிறார்?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.
முன்பாக மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் தலையீட்டால் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறைகள் தெரிவித்திருக்கிறார். இதை அவர் தொடர்ந்து கூறுவது நம் நாட்டுக்கு அவமானம்’’ என்று தெரிவித்தார்.