40
சென்னை, செப்டம்பர் 22:
சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியபோது, “தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றதேனால் மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும்” என அறிவுரை வழங்கினார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக திகழும் காரணமே இருமொழிக் கல்விக் கொள்கை ஆகும். இந்த கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் வெளிச்சம் பார்த்து சாதனை படைத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.