கரூர், அக்டோபர் 01:
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழு மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பகுதிக்கு செல்லவில்லை என கரூர் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “உண்மை கண்டறியும் குழு மணிப்பூருக்குச் சென்றிருந்தால் நல்லதாக இருந்திருக்கும். கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்துகளின் உண்மையை கண்டறிய குழு சென்றுவிட்டது. ஆனால், கரூருக்கு மட்டுமே சென்றது ஏன்? நமக்கு கிடைத்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்போம்.”
அவர் மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்ட விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உண்மை கண்டறியும் குழுவின் முன்பு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றும் அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி குறிப்பிட்டதாவது,உண்மைக் கண்டறியும் குழுவிடம் ஒரு பெரியவர் பேசும்போது, மாவட்ட நிர்வாகம் மீது தவறா? என மொழிபெயர்த்தவர் (தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு) மாவட்ட நிர்வாகம் மீது தவறான தகவலை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்தப் பெரியவர் நிகழ்ச்சியை ஏற்பாடு கட்சியின் மீதுதான் தவறு என சரியாகச் சொன்னார்.
உண்மைக் கண்டறியும் குழு என்ன தகவல்களை வேண்டுமானாலும் விசாரித்துக் கொண்டு, விசாரணை ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கட்டும். கருத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.
அனைவரின் கருத்தையும் வரவேற்போம். அது சரியா? தவறா? என்பதை விசாரணை ஆணையம் முடிவெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.