பிரசார விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? – நயினார் விளக்கம்

Seat-sharing to begin after Modi visit to TN: Nainar Nagendran

நெல்லை, அக்டோபர் 10:

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, சமீபத்திய அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகக் கொடி பறந்து தொண்டர்கள் ஆர்வத்துடன் செயல்படும் அவர்கள் ஒருங்கிணைந்த செயல்கள் எதுவும் மக்களுக்கு நன்மையே தரும் என்று தெரிவித்தார். முதலில் தொண்டர்கள் இணைந்து, பிறகு பொதுமக்கள் ஒருங்கிணைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக, திமுக அரசு பொறுப்பை புறக்கணித்து செயல்படுவதாக அவர் விமர்சித்து, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வுகளை முறையாக மேலாண்மை செய்யாமல், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார்.

2026 தேர்தலில் திமுக அரசு மக்களிடம் தகுந்த பதிலை பெறுமென்று நம்பிக்கை தெரிவித்த நயினார், எந்த கட்சி வெற்றி பெறுமென்றும் யாரும் முன்கூட்டியே கூற முடியாது; ஆனால் இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடையும் எனக் கூறினார்.

வரவிருக்கின்ற அக்டோபர் 12-ந் தேதி திட்டமிட்டதுபோல் பாஜக தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் நடைபெறும். பீகார் மாநில தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா அதிக பணி மேற்கொண்டு வருவதால், ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசும் காவல் துறையும் அனுமதி வழங்கினால் பிரசாரம் தொடரும் என கூறினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!