‘விஜய் எங்களை திட்டும்போது நாங்கள் விஜயை விமர்சித்தோம் – செல்லூர் ராஜு

'When Vijay criticized us, we criticized Vijay,' said Sellur Raju.

மதுரை, ஜனவரி 30:

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,”விஜய் எங்களை திட்டும்போது நாங்கள் அவருக்கு பதிலளிக்காமல் இருக்க முடியுமா? விஜய் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுவது நியாயமா? பொதுவாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நடைமுறையை நாங்கள் இதுவரை சந்தித்ததே இல்லை.

அ.தி.மு.க.வில் சேர்க்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தவருக்கு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? தன்னை சேர்க்க வேண்டும் என்று ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா?

ஓ.பன்னீர்செல்வம் நாடகம் நடத்துகிறார். அதனைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள். ஊடகத்தில் பேசிப்பேசி தான் அவர் இப்படி ஆகிவிட்டார். அவரது செயல்பாடுகள் அவருக்கு பின்னால் இருப்பவர்களையும் பாதிக்கிறது” என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக