மதுரை, ஜூலை 30:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் கீழடி அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட தொன்மைகளை மக்கள் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் பொருட்கள் மற்றும் தகவல்கள் தத்ரூபமாக காட்சியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 39 அகழாய்வு பணிகளில் 33 பணிகள் அதிமுக ஆட்சியில் இயங்கியவை எனவும், கீழடி அகழாய்வு மிக முக்கியமாகும் என்றும் கூறினார். கீழடியில் கண்ட பொருட்கள் புளோரிடா ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், எனினும் கீழடி விவகாரத்தில் சிலர் அரசு எதிர்ப்புச் செய்கின்றனர், அது யார் என்பது அனைவரும் அறிந்தவை எனத் தெரிவித்தார்.
தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அதிமுக அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்களில் முதல்வர்கள் இல்லை என்பதையும், இதனால் கல்வி தரம் பாதிக்கப்பட்டு மாணவர்கள் கற்றலுக்கு இடையூறு வருகிறது என்றும் கவலை தெரிவித்தார். 2021 பேரவைத் தேர்தலில் அரசாங்கம் அறிவித்த காலியிடங்கள் 5.50 லட்சம் என்பதற்கு பதிலாக, தற்போது 50 ஆயிரம் மட்டுமே பூர்த்தி செய்யபட்டுள்ளதாகவும், 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் திமுக அரசு முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.