வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரைத் தொடங்கியுள்ளோம்: தங்கம் தென்னரசு

TamilNadu debt will increase to Rs.10.62 lakh cr

சென்னை, பிப்ரவரி 17:

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்றார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை