டெல்லி, பிப்ரவரி 05:
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவையில் புதன்கிழமையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவையில் பிரதமரின் உரையைத் தொடங்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன், சுமார் 9 பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் பிரதமரைத் தாக்க காங்கிரஸார் திட்டமிட்டதால்தான், அவையை ஒத்திவைக்கும் முடிவெடுக்கப்பட்டதாக மக்களவை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, காங்கிரஸ் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த காங்கிரஸார், நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள பிரதமர் பயப்படுவதாகக் கூறினர்.