டெல்லி, செப்டம்பர் 09:
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 9) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
மொத்தம் 782 வாக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில், தற்போது 20 உறுப்பினர்கள் மட்டும் வாக்கு செலுத்தவில்லை. வெற்றிக்கான குறைந்தபட்ச வாக்கு எண் 392 ஆகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 422 உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த நிலையில், அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் 543 உறுப்பினர்களில் 1 இடம் காலியாகவும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களில் 5 இடங்கள் காலியாகவும் உள்ளன. அதோடு, 12 நியமன உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். பிஜேடியும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகளும் இந்த தேர்தலை புறக்கணித்தனர்.
மாலை 4 மணிகாட்டியபடி 762 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குபதிவு முடியும் நேரத்தில், 20 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணியின்படி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.