வாக்காளர் உரிமை பேரணி- ராகுலுடன் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

Voter Rights Rally - Akhilesh Yadav participates with Rahul

பீகார், ஆகஸ்ட் 30:

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் இன்று உத்தரபிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு டர்பங்காவில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் த்மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி ஜீப்பில் ஆர்ப்பாட்டமாக சென்ற நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட இருந்தனர்.

அகிலேஷ் யாதவ், இன்று தனது உரையில், “வாக்காளர் உரிமை பேரணியில் சேர்ந்துள்ளேன். பீகார் மக்களின் இந்த யாத்திரையை ஆதரித்து வாழ்த்துகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப்போகிறது” என்றார்.

இந்த விழிப்புணர்வு பேரணி, தமிழகத்துக்கு மட்டுமின்றி பல மாநில அரசியல் சூழலுக்கும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு