வாக்காளர் பட்டியல் முறைகேடு: ராகுல் தலைமையில் பெங்களூரில் இன்று ஆர்ப்பாட்டம்

Voter list irregularities: Protest led by Rahul in Bengaluru today

பெங்களூரு, ஆகஸ்ட் 8:

2024 ஆம் ஆண்டின் கர்நாடக மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சட்டவிரோதமாக திருத்தப்பட்டு, 1,00,250 வாக்குகள் திருடப்பட்டு, 12,000 போலி வாக்காளர்கள் உள்ளனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆதாரங்களுடன் நேற்று அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

இந்த நிலையில்அவர் தலைமையில் இன்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு பதிலாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி வி. அன்புகுமார் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் தோ்தல் சட்டங்களையும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடைபெறுவதாக அதிகாரி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நவம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025ல் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட்டதாகவும், எந்த மேல்முறையீடுகளும் வரவில்லை என்றும் கூறினார்.

ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் தகுதிக்கொல்லாதவர்கள் சேர்க்கப்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்துடன் இந்த விவாதம் தொடர்ந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை வெளிச்சத்தில் தெரிவிப்பதற்கான ஆர்ப்பாட்டமாக இது உள்ளது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு