29
கரூர், செப்டம்பர் 29:
கடந்த சனிக்கிழமை நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான தொடர்பாக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு நீலாங்கரை வீட்டில் தங்கி இருந்த விஜய், இன்று காலை 10 மணியளவில் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக த.வெ.க. தலைமையில் கூடும் இந்த ஆலோசனை, எதிர்கால செயல் திட்டங்களில் முக்கியமானது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.