ஈரோடு கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த வீடியோவை வெளியிட்ட விஜய்

Vijay released a video taken with his supporters at the Erode

ஈரோடு, டிசம்பர் 18:

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வந்த விஜய்க்கு, வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். ஆவேசமாக பேசிய விஜய், தனது உரையை முடித்ததும் பிரசார வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். தொடர்ந்து அவருக்கு தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நன்றி ஈரோடு” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக