கேப்டன் விஜயகாந்தின் பாதையை பின்பற்றும் விஜய் – பிரேமலதா

DMDK will begin distributing application forms from tomorrow - Premalatha announces.

புதுக்கோட்டை, செப்டம்பர் 13:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் வழியை பின்பற்றி வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

இதுகுறித்து பிரேமலதா கூறியதாவது: “ விஜய் சந்திக்கும் நெருக்கடிகள், முன்னைய 20 ஆண்டுகளில் தேமுதி-கவும் சந்தித்து கடந்து வந்தது. 20 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களால், எத்தனையோ விதமான பல்வேறு இடையூறுகளை சந்தித்தபோதும், 21 ஆம் ஆண்டின் அடிக்கல் நாட்டியிருக்கிறோம்.”

“விஜயகாந்த், குறுகிய காலத்தில் எதிர்க்கட்சியில் அந்தஸ்து பெற்ற மிக முக்கிய தலைவராக இருக்கிறார். தமிழகத்தில் தேசிய அளவிலான பெரிய இரண்டு கட்சிகள் இருப்பதால் தடைகள் நிறைய இருக்கும். ஆனால் தடைகளை உடைத்து வருவதுதான் வெற்றி.”

மேலும், “ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பை நாம் வரவேற்கிறோம். அதிகாரம் ஒரே இடத்தில் இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய வாய்ப்பும் கேள்வி கேட்பதற்கான இந்தக் கனவும் அமையும்,” எனவும் அவர் கூறினார்.

இதனிடைய, அதிமுக-வில் நிலவும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் ஒன்றாக இருந்தால் தான் பலம். பிரிந்து இருந்தால் எப்படி பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!