திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்!

திருச்சி, ஏப்ரல் 02:

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் இன்று வழங்கினார்.

அதற்கு முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் நின்றபடி, சாலைவலமாக விஜய் வருகைதந்தார். வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து மரக்கடை எம்ஜிஆா் சிலை பகுதிக்குச் செல்லும் விஜய், வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மக்கள் சந்திப்பை தொடங்கிய போது, முதன்முதலில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகேதான் விஜய் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Latest News