42
சென்னை, செப்டம்பர் 19:
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் ரோபோ சங்கரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.