விஜயின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Vijay campaigning in Salem! Entry is allow only if have an entry ticket!

சென்னை, அக்டோபர் 01:

கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதில், அவரது அனைத்து பிரசார நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போது, துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்கள் பல உயிரிழந்தனர். சம்பவத்திற்குப் பிறகு விஜய் நீலாங்கரை உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்து வருகிறார். கட்சியின் அடுத்த சுற்றுப்பயணங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தவெக சமூக வலைதளம் நிர்வாகிகளுக்கும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்று நாட்களாக பிறகு, அதாவது நேற்று தவெக தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, கரூரில் அளிக்கப்பட்ட இடத்திலேயே அவர் பேசியிருந்ததை வலியுறுத்தினார். பிரசாரம் தொடர்பான அடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். இரகசியமாகவே, பழிவாங்க நினைத்தால் என்னை எந்த விதமாக வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து இன்று தவெக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அலுவலக அறிவிப்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிகழ்ச்சி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!