“வெற்றி..வெற்றி..வெற்றி..!” தவெக மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் உரை

“Victory.Victory.Victory.!Pussy Anand's speech at the tvk

மதுரை, ஆகஸ்ட் 21:

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.

அவர் முதலில் வேட்பாளர்களை மட்டுமல்ல, நடிகர் விஜய்யின் பெற்றோர் போன்ற ஒவ்வொரு ஆதரவாளரையும் வரவேற்றார். “சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு விக்கிரவாண்டி அருகே முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது நம் எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் தலைவருடன் பகிர்ந்துகொண்டோம்,” என்று நினைவுகூர்ந்தார்.

அதன்படி “நம் தலைவர் ஒரு கட்சி தலைவர் அல்ல, புரட்சியாளர். கோடி-கணக்கான மக்களுடன் இணைந்து நிற்கின்றனர். அவர் சத்தமின்றி சாதனைகள் படைக்கிறார்,” என கூறினார். “இன்று நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நாம் நிற்கிறோம். இந்த மாநாட்டுக்கு வந்து இணைந்த லட்சக்கணக்கான மக்கள் வெற்றியின் அடையாளமாக இருக்கின்றனர்,” என்று ஆனந்த் தெரிவித்தார்.

இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி. என்று தெரிவித்தார். மேலும் எந்தவொரு தலைவருக்கும் வராத அளவில் தலைவர் விஜய்க்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் வரத் தொடங்கியது” என்றார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!