டெல்லி, செப்டம்பர் 09:
கடந்த ஜூலை 21-ம் தேதி பதவி விலகிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம் மற்றும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
இந்த நிலையில் மாலையில் வாக்குகள் எண்ணியபோது, சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைக் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு ஆனார், இந்தியா கூட்டணி போட்டியாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவையாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.