டெல்லி, ஆகஸ்ட் 16:
கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நல காரணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார் . அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். இதன் பின்னர், தேர்தல் ஆணையம் கடந்த 7-ந்தேதி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி, வருகிற 21-ந்தேதி இதற்கான கடைசி நாளாகும்.
இந்த தேர்தலுகாக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை நிறுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எம்.பி.களும் கலந்து புதிய துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசித்து இறுதி முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடியும், அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பிற மூத்த தலைவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
புது துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு 18 அல்லது 19-ந்தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் பின் இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்கும் பட்சத்தில், ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் 9-ந்தேதி பாராளுமன்றத்தில் நடைபெறும். பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்து விடுவார்கள்.
செப்டம்பர் 9-ந்தேதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியீடு செய்யும்.