பிரதமருடன் மேடையில் திருமாவளவன் பங்கேற்று இருந்தது குறித்து வன்னியரசு விளக்கம்

Vanniyarasu explains Thirumavalavan's participation on stage with the Prime Minister

சென்னை, ஜூலை 28:

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் நடந்த முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிராவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்றது குறித்து பரவியுள்ள வதந்திகளுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விளக்கம் வழங்கினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: “இந்த விழாவில் பிரதமர் மோடி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராகக் கலந்துகொண்டார், எமது தலைவர் திருமாவளவன் அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொண்டார். இதில் அரசியல் அர்த்தம் எதுவும் இல்லை. தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் ஐக்கியமாக பங்கேட்பது நாகரீக அரசியலுக்கே உரியது.”

இதே விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது, அது ஒரு முக்கிய திருப்புமுனை” என்று கூறியது தொடர்பாக, வன்னியரசு பதிலளித்துள்ளார், “இதில் எந்தவித திருப்புமுனையும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யாது. சனாதனத்தை நிறுவ முயற்சிக்கும் பாஜகவுடன் அரசியல் உறவு எப்போதும் கிடையாது என்று நம் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்,” என வலியுறுத்தினார்.

மேலும், “எந்த மேடையில் இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் உண்மை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது; இந்த கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!