நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோவின் பிரியாவிடை உரை

Vaiko's farewell speech in the Rajya Sabha

டெல்லி, ஜூலை 24:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

துணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து துவங்கிய வைகோ, தனது பணிக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 1978, 1984, 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மக்கள் அவரை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்து அதற்கான நன்றியை தெரிவித்தார்.

அம்பேத்கர் உருவப்படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்தமைப்பில் அவரது பங்கு, ஈழத் தமிழர்களுக்கான தீர்மானங்களை கொண்டு வந்த போராட்டங்கள், மற்றும் ‘பொடா’, ’மிசா’ போன்ற சட்டங்களின் கீழ் சிறைச்சாலையில் கழித்த காலம் குறித்து கூறினார். மேலும் சிறையில் இருந்தபோது எழுதிய புத்தகம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அங்கீகாரம் பெற்றதை நினைவு கூர்ந்தார்.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை பற்றியும், தமிழகத்தின் உரிமைகளை போன்ற அரசியல் நிகழ்வுகள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் அழகான நினைவுகளை பகிர்ந்தார். தேசிய அரசியலில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் முயற்சிகளை எதிர்த்து தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்திய நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்.

லாங் ஃபெல்லோவின் ‘வரலாறு படைத்தவர்கள் இரவில் தூங்காமல் உழைத்தார்கள்’ என்ற கருத்தையும், பேரறிஞர் அண்ணாவின் திராவிட இன நற்பண்புகளை வாழ்த்திய அவரின் கருத்துக்களையும் எடுத்துச் சொன்னார்.கடைசியில், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக தனது உறுதியை வெளிப்படுத்தி, “நான் ஒருபோதும் அடிபணியவோ சமரசம் செய்யவோ மாட்டேன்” என்று வலியுறுத்தி, அனைவருக்கும் நன்றிக்குறிப்பு தெரிவித்து உரையை முடித்தார்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு