வடிவேலு ஷோ நடத்தினால் கூட்டம் கூடும் : திருமாவளவன் விமர்சனம்

Vadivelu hosts the crowd gather: Thiruma

திருச்சி, செப்டம்பர் 13:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சி மரக்கடை பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் வந்து, சிறப்பு பிரசார வேனில் மரக்கடை பகுதிக்குச் சென்றார்.

ஆனால், அதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் காரணமாக, காலை 10.30 மணிக்கு தொடர்ந்தும் பிரசார வேன் வர முடியாமல் தத்தளித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் விஜய் பிரசாரம் மற்றும் தொண்டர்களின் கூட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த திருமாவளவன் , “இப்போது வரை விஜய் தனித்துத் தான் செயல்படுகிறார். அவர் தலைமையிலான கூட்டணி அமைக்கப்படவில்லை. திமுக கூட்டணியை வீழ்த்த ஆற்றலை விஜய் பெறவில்லை. வடிவேலு ஷோ நடத்தினால் கூட கூட்டம் கூடும் ” என்று விமர்சனம் செய்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!