ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்

ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான 5 டேங்கர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது அந்த தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் 5 டேங்கர் விமானங்கள் சேதமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களான பி-2 ஸ்டெல்த், எஃப்-15 ஸ்ட்ரைக் ஈகிள், எஃப்-35 உள்ளிட்டவற்றிற்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக அமெரிக்கா கிட்டத்தட்ட 100 டேங்கர் விமானங்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Latest News