அமெரிக்கா, ஆகஸ்ட் 8:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதிக்கப்பட்டது 25% கச்சா எண்ணெய் இறக்குமதி வரியை இருமடங்காக உயர்த்தியுள்ளார். அடுத்த 21 நாட்களுக்குள் அமல் பெறுவதாக அறிவித்தார். இந்த உத்தரவுக்கு டிரம்ப் உடனடியாக கையொப்பமிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை அமல் பெறவிருந்த 25% வரி தற்போது 50% ஆக உயர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதியளவில் அமல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வரி உயர்வு காரணமாக அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகரீதியான பேச்சுவார்த்தைக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியாவுக்கு அமெரிக்க குழு வருகிற நிலையில் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்கா அத்தியாவசிய சில இந்திய பொருட்களுக்கு மட்டுமே இருமடங்கு வரி உயர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது.
டிரம்ப் குற்றச்சாட்டு: முன்னதாகஅமெரிக்காவுடன் இணக்கமான வா்த்தகத்தை மேற்கொள்ளாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியை படிப்படியாக அதிகரிக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தையே உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துகிறது என்பதே டிரம்பின் முக்கியக் குற்றச்சாட்டாகும். இந்த நிலையில் ” வரி பிரச்சனைகள் சரியாகும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெறாது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் “நியாயமற்றதும் ஏற்க முடியாததும்” என கண்டித்து, 140 கோடி மக்கள் எரிசக்தி தேவையை பூர்த்திசெய்ய ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி அவசியம் என்று விளக்கி உள்ளது.