வாஷிங்டன், ஜூலை 8:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டியிருப்பதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். கடந்த வாரம் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் சில ராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிரம்ப் கூறியதாவது, “உக்ரைன் தற்போது ரஷ்யாவின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அவர்கள் தங்களை பாதுகாக்கும் திறன் பெற வேண்டும். அதற்காக நாங்கள் மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டியுள்ளதாக பேசினார். குறிப்பாக பாதுகாப்பு ஆயுதங்கள் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரஷ்யா-உக்ரைன் போராட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்கிறது. சமீபத்தில் ரஷ்யா மேற்கொண்ட விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் உக்ரைன் தனது பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி வருகிறது.
மேலும் டிரம்பின் இந்த அறிவிப்பு உக்ரைனுக்கு ஒரு முக்கிய ஆதரவாக கருதப்படுகிறது, ரஷ்யாவின் தொடரும் தாக்குதல்களுக்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.