சென்னை, ஜூலை 17:
டிவிஎஸ் நிறுவனம், 2025ம் ஆண்டுக்காக மேம்பாட்டு அம்சங்களுடன் புதிய அப்பாச்சி RTR 310 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னைய மாடலை விட குறைவான ஆரம்ப விலையில் – ரூ.2.40 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அம்சங்களும் கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ.3.03 லட்சம் என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய பைக்கில் இருந்த அதே இன்ஜின் 310சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின், 35.6 ஹெச்பி பவர், 28.7என்.எம் டார்க் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. RR 310 பைக்கில் உள்ள அதே ரியர் ஸ்ப்ராக்கெட்டை புதிய RR 310 பைக்கிலும் உள்ளது. மேலும் புதிய RR 310 பைக்கில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ட்யூன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை போல பைக்கில் பாதுகாப்பு வசதிகளாக ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் இணைந்த டிராக் டார்க் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன் , பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர், க்ரூஸ் கண்ட்ரோல், ச்விட்சபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் போன்றவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்செனல் பிளாக், ஃப்யூரி யெல்லோ மற்றும் செபாங் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் இந்த பைக்கை விற்பனை செய்து வந்தது டிவிஎஸ். தற்போது இந்த நிறங்களுடன் ஃபியரி ரெட் என்ற புதிய நிறத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இது மட்டுமின்றி புதிய பைக்கில் நக்குல் கார்டு, ட்ரான்ஸ்பரன்ட் கிளட்ச் கவர் மற்றும் சீக்வென்ஷியல் டர்ன் சிக்னல்ஸ் ஆகிய அம்சங்களையும் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். இந்த பைக்குடன் கூடுதல் வசதிகளை இரண்டு கிட்களாக வழங்குகிறது டிவிஎஸ். ஒன்று டைனமிக் கிட் (Dynamic Kit) மற்றொன்று டைனமிக் ப்ரோ கிட் (Dynamic Pro Kit). டைனமிக் கிட்டானது ரூ.18,000 என்ற விலையைக் கொண்டிருக்கிறது. டைனமிக் ப்ரோ கிட்டானது ரூ.28,000 என்ற விலையைக் கொண்டுள்ளது
பேஸ் மற்றும் டாப் என இரண்டு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது புதிய RTR 310. பேஸ் வேரியன்டானது ரூ.2.40 லட்சம் விலையையும், டாப் வேரியன்டானது ரூ.2.57 லட்சம் விலையையும் கொண்டுள்ளது.
இந்த வேரியன்ட்களுடன் மேற்கூறிய டைனமிக் அல்லது டைனமிக் ப்ரோ ஆகிய கிட்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கிட்டை கூடுதல் விலையில் வாங்கிக் கொள்ளலாம். இரண்டு கிட்களையுமே கூட வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
டாப் வேரியன்டுடன், மேற்கூறிய இரண்டு கிட்களையும் சேர்த்தால் ரூ.3.03 லட்சம் என்ற விலையில் இந்த பைக்கிற்கு கொடுக்கப்படும் அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் அறிமுக சலுகை சிறப்பு தள்ளுபடியாக ₹10,000 வரை வழங்கப்படுகிறது டிவிஎஸ்.
ஆக, பைக்கின் மேக்கானிக்கல் செயல்திறன் மாற்றமின்றியும், புதிய ப்ரீமியம் வசதிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விருப்ப தயாரிப்புகளுடன் RTR 310, இந்தியா மார்க்கெட்டில் விற்பனைக்குத் தயாராகியுள்ளது.