டிசம்பர் 15-ல் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்

Union Home Minister to visit TN on Dec. 15

டெல்லி, டிசம்பர் 12:

அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15-ம் தேதி தமிழகம் வருகிறார்.

வேலூரில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க அமித் ஷா தமிழகம் செல்வார். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள், அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் வாரத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அமித் ஷாவை சந்தித்தார். அதற்கு முன்னர் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக