அண்ணா இல்லத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார் உதயநிதி!

Udhayanidhi's tour started from Anna's house!

காஞ்சிபுரம் , செப்டம்பர் 09:

தமிழக துணை முதல்வர் மற்றும் திமுக இளைஞர் அரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று திமுக நிர்வாகிகளை இணைத்து தொகுதிவாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவருடைய இந்த பயணம் அண்ணா இல்லத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன் ஆரம்பமாகியுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.

மேலும் அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ள பதிவில், “அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு இன்று வருகை தந்த போது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!