சென்னை, செப்டம்பர் 22:
அடுத்த ஆண்டு 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 20-ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அந்த திட்டம் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 27-ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது அத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, 27-ஆம் தேதி சேலம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டு, கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 27-ஆம் தேதி காலை 11 மணிக்குப் பின் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றவுள்ளர். பிறகு மாலை 3 மணிக்குத் திரும்பி கரூர் மாவட்டத்தில் பேச திட்டமிடப்பட்டுள்ளார்.