திருச்சியில் தவெக தலைவர் விஜய்; ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்

tvk Vijay in Trichy;

திருச்சி, செப்டம்பர் 12: :

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . அதன் ஆரம்பமாக இன்று திருச்சியில் தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுச் சந்திப்பு நடைப்பெறுகிறது.

சென்னையிலிருந்து இன்று காலை 9.40 மணிக்கு தனி விமானத்தில் திருச்சிக்கு வந்த விஜய்க்கு ஏராளமான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திருச்சி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வந்தனர். காலை 10.30 மணிக்கு மரக்கடை அங்குள்ள கூட்டத்தில் விஜய் மக்களுடன் உரையாற்றினார். இந்த வருகையை முன்னிட்டு, திருச்சியில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது; டோல்கேட் பகுதியிலும் அதிகமாக மக்கள் கூட்டம் காணப்பட்டது.

மரக்கடை பிரசாரத்தை முடித்த பிறகு விஜய் அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். போக்குவரத்து பாதிப்பைத் தவிர்க்க தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!