தவெக சிறப்பு பொதுக்குழு தொடக்கம் – கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி

Permission granted for public meeting in Puducherry!

சென்னை, நவம்பர் 05:

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

இக்கூட்டம் தொடங்கியவுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச்சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்காக உறுப்பினர்கள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நிலையில், இன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல்களுக்கான வியூகங்கள் விவாதிக்கப்படுவதோடு, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த பல தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் உரையாற்றி, எதிர்கால கட்சித் திட்டங்களையும் போராட்ட வழிகாட்டுதல்களையும் உறுப்பினர்களிடம் பகிரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!