புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்!

Why was a sudden summer amount of Rs. 2,000 announced? - Vijay questions

புதுச்சேரி, டிசம்பர் 09:

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி வந்தடைந்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு கியூஆர் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலத்தினர் இக் கூட்டத்துக்கு வர வேண்டாம். அனுமதி அட்டை இல்லாதவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைப் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

விஜய் இன்று காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகை தந்துள்ளார்.

விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசவுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கைகள் வசதி செய்யப்படவில்லை.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்