மதுரை, ஆகஸ்ட் 21:
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2-வது ஆண்டு மாநாடு இன்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கான சுகாதார பாதுகாப்பை முன்னிட்டு, மாநாட்டு திடலிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலில் 506 ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கும் வசதிகளில், 1.5 லட்சம் பேர் அமரக்கூடிய இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான பார்க்கிங் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் உள்ளன.
மாநாடுக்கு வருவோர் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக 600 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சேர்த்துச் செயல்படுகின்றனர். அவசர காலத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் வசதிகளும் முழுமையாக தயார் நிலையில் இருக்கின்றன.