காரக்பூர், செப்டம்பர் 06 :
மேற்கு வங்காளத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழுமையாக காணாமல் போய்விடும் என்று பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் வீழ்ச்சியடைந்தபோல், திரிணாமுல் காங்கிரசுக்கும் அந்த மாதிரி நிலை ஏற்படும். அந்த கட்சி ஊழலில் மூழ்கி, அரசு அலுவலகங்களில் பெரும் குழப்பமும் சட்டம் ஒழுங்கும் கிடையாது எனக் கருத்து தெரிவித்தார். மேலும், அரசு அமைப்பு ஊழல் மற்றும் தவறான நிர்வாக காரணமாக சீர்கேட்டுக்கு உள்ளாகி, பொதுமக்கள் அந்த தீமைகளால் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்க சட்டசபையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும்போது, மாநிலத்தில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூட இல்லை என்ற நிலைமை வரும். அவர்கள் தவிர்க்க முடியாத தோல்வியை சந்திப்பார்கள் என்றார். வங்காளிகளுக்கு எதிராக பயங்கரவாத செயலை தொடுத்த எந்த கட்சியும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறினார். தொடர்ந்து அவர், பா.ஜ.க. வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. மத்தியில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. மோசடிகளின் தலைவராக உள்ளது. அக்கட்சியை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.