தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

Total voters in Tamil Nadu are 5.67 crore.

சென்னை, பிப்ரவரி 23:

தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.

ஆண்கள்: 2,77,38,925,

பெண்கள்: 2,89,60,838,

மூன்றாம் பாலினத்தவர்: 7,671.

வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207

தமிழகத்தில் அக்.27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிச.19 முதல் பிப்.10 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் form 6 மூலம் 27,53,796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் இறுதிப் பட்டியில் இடம்பெற்றுள்ளதா? என்பதை https://elections.gov.tn.in என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!