ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்கா – முதல்வர் திறந்து வைப்பு

Tolkappiyar Park renovate Rs. 42.45 crore – CM inaugurated

சென்னை, அக்டோபர் 24:

ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்கா, முழுமையான நவீன புனரமைப்புக்குப் பிறகு இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து மக்களிடம் பயன்பாட்டுக்காக ஒப்படைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முயற்சியில் உருவாக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்கா, பல ஆண்டுகளுக்கு பின் ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்த பூங்காவில் புது வடிவமைப்பாக, நவீன வசதிகளுடன் புதிய நுழைவு வாயில், சுற்றுப்புறம் கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி வலையமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மாணவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பிரத்யேக மின்வாகனத்தில் மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பூங்காவின் வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஓய்வு மற்றும் பசுமை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் கூடுதல் மரம் நடவு மற்றும் நீர்நிலைகள் சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை